India vs Sri Lanka: டி20 அணியில் பும்ரா தேவையே இல்ல..! அதிர்ச்சி கிளப்பிய ஆஷிஷ் நெஹ்ரா

By karthikeyan VFirst Published Feb 24, 2022, 3:31 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா சேர்க்கப்பட்டது தனக்கு வியப்பாக இருப்பதாக ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை. கேஎல் ராகுல் காயம் காரணமாக ஆடவில்லை.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய 2 சீனியர் வீரர்களும் கம்பேக் கொடுத்துள்ளனர். பும்ரா தான் துணை கேப்டன்.

இந்நிலையில், பும்ரா டி20 தொடரில் ஆடுவது வியப்பாக இருப்பதாக ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா ஆடுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. எந்த வீரருமே அணிக்காக விளையாட வேண்டும் என்றுதான் விரும்புவார். ஆனால் டி20 தொடருக்கு பின், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடவுள்ளது. அதனால் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தும் விதமாக டி20 தொடரில் ஆடியிருக்க தேவையில்லை. ஏனெனில் இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலர்கள் நிறைய இருக்கிறார்கள். புதிய பவுலர்களுக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

பும்ரா அணிக்குள் வந்ததால் புவனேஷ்வர் குமார், சிராஜ், ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது. எனவே பும்ரா ஆடுவது எனக்கு சர்ப்ரைஸாகத்தான் உள்ளது என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!