IPL 2022: 10 அணிகளின் தொடக்க வீரர்கள்..! எந்த ஜோடி மிரட்டலான அதிரடி ஜோடி..?

Published : Feb 23, 2022, 10:18 PM IST
IPL 2022: 10 அணிகளின் தொடக்க வீரர்கள்..! எந்த ஜோடி மிரட்டலான அதிரடி ஜோடி..?

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் 10 அணிகளின் சார்பிலும் களமிறங்கும் தொடக்க ஜோடிகளை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குவதால், இந்த சீசனில்10 அணிகள் ஆடுகின்றன. அதனால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும்.

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால், ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தது. ஏலத்தில் தேவையான வீரர்களை எடுத்தது.

ஐபிஎல்லில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளேவை பயன்படுத்தி அமைத்து கொடுக்கும் தொடக்கம்தான், ஒரு அணி அடிக்கும் ஸ்கோரை தீர்மானிக்கும். எனவே அனைத்து அணிகளும் தொடக்க வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுத்தன.

ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க, இஷான் கிஷனை ரூ.15.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. டெவான் கான்வே, ஜேசன் ராய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர், குயிண்டன் டி காக், ஜேசன் ராய், ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆகிய வெளிநாட்டு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் 15வது சீசனில் ஒவ்வொரு அணியிலும் தொடக்க வீரர்களாக இறங்கும் தொடக்க ஜோடியை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா - இஷான் கிஷன்

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட்  - டெவான் கான்வே

கேகேஆர்: வெங்கடேஷ் ஐயர் - அலெக்ஸ் ஹேல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் - தேவ்தத் படிக்கல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் - அபிஷேக் ஷர்மா

ஆர்சிபி: விராட் கோலி - ஃபாஃப் டுப்ளெசிஸ்

டெல்லி கேபிடள்ஸ்: பிரித்வி ஷா - டேவிட் வார்னர் 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: மயன்க் அகர்வால் - ஷிகர் தவான்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: கேஎல் ராகுல் - குயிண்டன் டி காக்

குஜராத் டைட்டன்ஸ்: ஜேசன் ராய் - ஷுப்மன் கில்
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?