இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆல்டைம் மேட்ச்வின்னர் அவருதான்..! ஆஷிஸ் நெஹ்ரா அதிரடி

By karthikeyan VFirst Published Aug 10, 2020, 4:18 PM IST
Highlights

பவுலிங்கில் இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் அனில் கும்ப்ளே தான் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். 
 

இந்திய கிரிக்கெட் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பேட்டிங் அணியாக திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் பவுலிங்கை விட எப்போதுமே பேட்டிங் தான் சிறப்பாக இருந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லட்சுமணன், யுவராஜ் சிங் என சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி, இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி, தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் என சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. இதற்கிடையே, ரெய்னா உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்துள்ளனர்.

ஆனால் எத்தனையோ தலைசிறந்த பேட்ஸ்மேன்களை பெற்றிருந்தாலும், பவுலர்களின் உதவியில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் வெல்ல முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஒரு அணியால் டெஸ்ட் போட்டியில் ஜெயிக்க முடியும். இப்போதைய இந்திய அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு, பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது தான் காரணம். 

இந்திய கிரிக்கெட்டில், கபில் தேவ், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங், தோனி என பேட்டிங்கில் பல மேட்ச் வின்னர்கள் இருந்துள்ளனர். பவுலிங்கில் அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் என்ற வெகுசிலரே மேட்ச் வின்னர்களாக இருந்தனர். 

அந்தவகையில், இந்திய கிரிக்கெட்டில், பவுலிங்கில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் அனில் கும்ப்ளே தான் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே, இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1999ல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தவர் கும்ப்ளே.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் கும்ப்ளே குறித்து பேசிய பிரெட் லீ, அனில் கும்ப்ளே ஆரம்பத்தில் கிளாஸ் எல்லாம் போட்டு, பார்க்க காலேஜ் மாணவர் மாதிரி இருந்தார். அவரை பார்க்கும்போது, வெட்கப்படும் மற்றும் பயந்த சுபாவமாக தெரிந்தார். ஆனால் 130 டெஸ்ட் போட்டிகள், 619 விக்கெட்டுகள். மிகப்பெரிய லெஜண்ட் கும்ப்ளே என்று பிரெட் லீ புகழ்ந்தார். 

அதற்கு பதிலளித்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, கும்ப்ளே இந்திய அணிக்காக ஆடியதை நான் டிவியில் முதல் முறை பார்த்தபோது அவர் கிளாஸ் போட்டிருந்தார். அந்த பெரிய கிளாஸ்களை போடுவார். ஆனால் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும்போது, முகம், உடல்மொழி, ஸ்டைல் ஆகியவை 5-6 ஆண்டுகளில் அதுவாகவே மாறிவிடும். ஆனால் பவுலிங்கில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று ஆஷிஸ் நெஹ்ரா கும்ப்ளேவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!