IPL 2022: அகமதாபாத் அணியின் ஹெட் கோச்சாகும் இந்திய முன்னாள் ஃபாஸ்ட்பவுலர்! ஆலோசகராகிறார் லெஜண்ட் கிரிக்கெட்டர்

By karthikeyan VFirst Published Jan 4, 2022, 7:52 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணியின் பயிற்சியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன.

எனவே 15வது சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.

15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு (அதிகபட்சம் 4 வீரர்கள்) மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது.

இந்நிலையில், 2 புதிய அணிகளில் ஒன்றான லக்னோ அணி பயிற்சியாளர் குழுவை நியமிப்பதில் அதிவேகமாக செயல்பட்டது. ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான ஆண்டி ஃப்ளவரை தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கௌதம் கம்பீரை ஆலோசகராவும், கேகேஆர் அணி கோப்பையை வென்றபோது உதவி பயிற்சியாளராக இருந்த விஜய் தாஹியாவை உதவி பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது லக்னோ அணி.

ஆனால் மற்றொரு புதிய அணியான அகமதாபாத் அணி பயிற்சியாளர்கள் நியமனத்தில் வேகம் காட்டவில்லை. அந்த அணியின் பயிற்சியாளர் குழு தொடர்பான பல்வேறு தகவல்கள் வலம்வருகின்றன.  ஆஷிஸ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் ஆகியோர் அகமதாபாத் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அவர்களது ரோல் குறித்த தெளிவான தகவல் வெளியாகியுள்ளது. ஆஷிஸ் நெஹ்ரா அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவானான கேரி கிறிஸ்டன் ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து முன்னாள் ஓபனர்  விக்ரம் சோலங்கி, அகமதாபாத் அணியின் “Director of Cricket" மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ஆகிய 2 பொறுப்புகளிலும் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!