India vs South Africa: ஷர்துல் தாகூரிடம் சரணடைந்த தென்னாப்பிரிக்கா! முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்

Published : Jan 04, 2022, 07:38 PM IST
India vs South Africa: ஷர்துல் தாகூரிடம் சரணடைந்த தென்னாப்பிரிக்கா! முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்

சுருக்கம்

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாகூரின் அபாரமான பவுலிங்கால் தென்னாப்பிரிக்க அணியை 229 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.  

இந்தியா - நியூசிலாந்து இடையே ஜோஹன்னஸ்பர்க்கில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் மட்டுமே அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 50 ரன்கள் அடித்தார். மயன்க் அகர்வால் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். புஜாரா (3), ரஹானே (0) ஆகிய இரு சீனியர் வீரர்களும் சொதப்பினர். ஹனுமா விஹாரி 20 ரன்களும், ரிஷப் பண்ட் 17 ரன்களும் மட்டுமே அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் அபாரமாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரமை 7 ரன்னுக்கு வெளியேற்றினார் ஷமி. அதன்பின்னர் கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். எல்கரும் பீட்டர்சனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவர்கள் இருவரும், பும்ரா, ஷமி ஆகிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு கவனமாக ஆடினர். அதனால் எல்கர்  - பீட்டர்சன் ஜோடியை பிரிப்பது சவாலான காரியமாக இருந்தது. இதுபோன்ற பெரிய பார்ட்னர்ஷிப்பை பிரிப்பதில் வல்லவரான ஷர்துல் தாகூர் பவுலிங் போட வந்தார். அவரது 2வது ஓவரிலேயே எல்கரை 28 ரன்னில் வெளியேற்றி பிரேக் கொடுத்தார். களத்தில் நங்கூரமிட்டு அரைசதம் அடித்திருந்த பீட்டர்சனையும் 62 ரன்னில் வீழ்த்தினார் தாகூர். வாண்டெர் டசனை வெறும் ஒரு ரன்னில் வீழ்த்தி முதல் செசனை முடித்தார் தாகூர். முதல் செசன் முடியும் தருவாயில் டசனை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

அதன்பின்னரும் ஷர்துல் தாகூருக்கே விக்கெட்டுகள் கிடைத்தன. டெம்பா பவுமாவும் கைல் வெரெய்னும் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அந்த ஜோடியையும் ஷர்துல் தாகூர் தான் பிரித்தார். 21 ரன்னில் வெரெய்னை வீழ்த்திய ஷர்துல் தாகூர், அரைசதம் அடித்த டெம்பா பவுமாவையும் 51 ரன்னில் வீழ்த்தினார். அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த டெம்பா பவுமாவையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். அதன்பின்னர் ரபாடாவை(0) ஷமியும், கேஷவ் மஹராஜை (21) பும்ராவும் வீழ்த்த, இங்கிடியை (1) ஷர்துல் தாகூர் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸை முடித்தார்.

முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட் வீழ்த்தினார். 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இந்திய அணி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: இன்று ஒரு மினி உலகக்கோப்பை பைனல்! Super 8ல் தென்னாப்பிரிக்காவை கதறவிடுமா இந்தியா? ரெக்கார்டுகள் சொல்லும் அதிரடி உண்மை!
இந்தியாவுக்கு பெரிய ஷாக்..! ஹர்திக் அடித்த பந்து.. நிலைகுலைந்த சிராஜ்: களமிறங்குவதில் சிக்கல்..