ரோஹித், கோலியை ஆரம்பத்துலயே தூக்கிட்டா இந்தியாவை 70 ரன்களுக்கு சுருட்டலாம்! எதிரணியின் முன்னாள்கேப்டன் வியூகம்

By karthikeyan VFirst Published Sep 16, 2022, 7:16 PM IST
Highlights

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஆரம்பத்தில் வீழ்த்திவிட்டால் இந்திய அணியை டி20 போட்டியில் 70 ரன்களுக்கு சுருட்டிவிடலாம் என்று ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து என மற்ற அணிகளும் செம வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - INDA vs NZA: சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் இந்திய அணி அறிவிப்பு

டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணி குறித்து ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் கூறிய கருத்து பரபரப்பாகியுள்ளது.

இந்தியாவில் இன்றுமுதல் நடக்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் உலக ஜெயிண்ட்ஸ்  அணிக்காக ஆடும் ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் ஹிந்துஸ்டான் டைம்ஸுக்கு பேட்டியளித்தார். 

இதையும் படிங்க - பாபர் அசாமிடம் படிச்சு படிச்சு சொன்னேன்; அவரு கேட்கல! இவ்ளோ சீக்கிரம் கெடுத்துட்டாங்க- முன்னாள் வீரர் வருத்தம்

அப்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்த கேள்விக்கு பதிலளித்த அஸ்கர் ஆஃப்கான், ஒரு கிரிக்கெட்டர் சரியாக ஆடவில்லை என்றால் அவரைப்பற்றி பேசுவது இயல்புதான். அது எல்லா கிரிக்கெட்டர்களின் வாழ்விலும் நடக்கும். நாங்கள்(ஆஃப்கானிஸ்தான்) இந்தியாவிற்கு எதிராக ஆடும்போதெல்லாம், ரோஹித் மற்றும் கோலிக்கு எதிராகத்தான் திட்டங்கள் தீட்டுவோம். அவர்கள் இருவரையும் வீழ்த்திவிட்டால் பாதி இந்திய அணி காலி. நாங்கள் மட்டுமல்ல; அனைத்து அணிகளுமே அவர்கள் இருவருக்கு எதிராகத்தான் திட்டம் தீட்டுவர். அவர்கள் இருவரும் தனிநபர்களாக போட்டியை ஜெயித்து கொடுக்க வல்லவர்கள். அவர்கள் இருவரையும் ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால் பின்னர் ரொம்ப கஷ்டமாகிவிடும். அதே அவர்களை தொடக்கத்திலேயே வீழ்த்திவிட்டால் இந்திய அணியை ஒருநாள் போட்டியில் 110-120 ரன்களுக்கும், டி20 கிரிக்கெட்டில் 60-70 ரன்களுக்கும் சுருட்டிவிடலாம் என்று ஆஃப்கான் தெரிவித்தார்.
 

click me!