தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தனது பெற்றோரிடம் கொடுத்து அழகு பார்த்துள்ளார்.
இந்திய அணியானது 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 1-1 என்று சமன் செய்யப்பட்டது. முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர் சமனானது. இதையடுத்து நடந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கானின் வேகத்தில் தென் ஆப்பிரிக்கா 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். 2ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. இதில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு தொடர் நாயகன் விருதும் வென்றார்.
ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்த நிலையில், தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் நாடு திரும்பினர். இதில், அர்ஷ்தீப் சிங்கும் ஒருவர். அவர், தான் பெற்ற ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தனது பெற்றோரிடம் கொடுத்து அழகுபார்த்துள்ளார். இந்த இரு டிராபிகளுடன் அர்ஷ்தீப் சிங்கின் பெற்றோர் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்; டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்!
Arshdeep Singh's father & mother with the awards from South Africa series.
- A lovely picture. pic.twitter.com/bzQuPZspLR