ராகுல் டீம்ல தேவையில்ல.. ஆனால் அவங்க 4 பேரையும் கண்டிப்பா எடுக்கணும்!! கும்ப்ளே தேர்வு செய்த உலக கோப்பை அணி

By karthikeyan VFirst Published Mar 16, 2019, 4:09 PM IST
Highlights

உலக கோப்பைக்கான இந்திய அணியில் 12-13 வீரர்கள் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், 2-3 வீரர்கள் மட்டும் இறுதி செய்யப்பட வேண்டும். அந்த இடங்களுக்கு பல முன்னாள் வீரர்களும் தங்களது பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர்.
 

உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், 4ம் வரிசை வீரர், மாற்று தொடக்க வீரர், மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இடங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

உலக கோப்பைக்கான இந்திய அணியில் 12-13 வீரர்கள் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், 2-3 வீரர்கள் மட்டும் இறுதி செய்யப்பட வேண்டும். அந்த இடங்களுக்கு பல முன்னாள் வீரர்களும் தங்களது பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை லட்சுமணன், காம்பீர், ரோஜர் பின்னி உள்ளிட்ட பலரும் தேர்வு செய்தனர். அந்த வரிசையில் முன்னாள் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 15 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். 

ரோஹித், தவான், கோலி, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, பும்ரா ஆகிய 11 வீரர்களையும் ஆடும் லெவனிற்கு தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் பெரும் சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசையில் தோனியை களமிறக்கலாம் என்று கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார். 

மாற்று தொடக்க வீரராக ராகுலை அணியில் எடுக்க தேவையில்லை. 12வது வீரராக ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை கும்ப்ளே தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய கும்ப்ளே, விஜய் சங்கர் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவரை 12வது வீரராக எடுக்கலாம். ஜடேஜாவை விட விஜய் சங்கர் தான் சரியான ஆள். விஜய் சங்கர் பேட்டிங் நன்றாக ஆடுகிறார். பவுலிங் பெரியளவில் வீசவில்லை என்பதால் அவரை 10 ஓவர்கள் வீசவைக்க முடியாது. ஆனால் இடையிடையே சில ஓவர்களை வீசவைக்கலாம். பேட்டிங் சிறப்பாக ஆடுவதால் விஜய் சங்கரை 12வது வீரராக அணியில் எடுக்கலாம். 

அனுபவ வீரரான ராயுடு மிடில் ஆர்டரில் பயன்படுவார் என்பதால் அவரை 13வது வீரராக தேர்வு செய்துள்ளார் கும்ப்ளே. மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை 14வது வீரராகவும் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக கலீல் அகமதுவை 15வது வீரராகவும் கும்ப்ளே தேர்வு செய்துள்ளார். 

கும்ப்ளே தேர்வு செய்துள்ள உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப், ஷமி, சாஹல், பும்ரா.

பென்ச்:

விஜய் சங்கர், ராயுடு, ரிஷப் பண்ட்(மாற்று விக்கெட் கீப்பர்), கலீல் அகமது(நான்காவது வேகப்பந்து வீச்சாளர்).
 

click me!