அரசுப் பேருந்தில் வீட்டிற்கு செல்லும் அனில் கும்ப்ளே – வைரலாகும் புகைப்படம்!

By Rsiva kumar  |  First Published Sep 11, 2023, 1:57 PM IST

பெங்களூருவில் தனியார் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னால் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே அரசுப் பேருந்தில் வீட்டிற்கு செல்லும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்த “சக்தி”திட்டமானது தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

BHA vs PAK: ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

இதனால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இலவச பேருந்து திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அதற்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தனியார் வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Asia Cup 2023, IND vs PAK: ரிசர்வ் டேயால் வந்த சிக்கல்: அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் டீம் இந்தியா!

அதுமட்டுமின்றி நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அரசு பேருந்தில் பயணித்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விமான நிலையத்திலிருந்து இன்று வீடு திரும்பும் BMTC பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளும், 271 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

World Cup 2023: ஏப்ரல் 4ல் ஊன்றுகோல் உதவியுடன் வந்த கேன் வில்லியம்சன்; இன்று உலகக் கோப்பை கேப்டன்!

 

BMTC trip back home today from the airport. pic.twitter.com/jUTfHk1HrE

— Anil Kumble (@anilkumble1074)

 

click me!