பாகிஸ்தானுக்கு எதிரான போட்டில் அரைசதம் அடித்ததன் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் ஆடியது. இதில், ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 240 இன்னிங்ஸில் விளையாடி ரோகித் சர்மா 50 அரைசதமும், 30 சதமும் அடித்துள்ளார்.
இதில், தொடக்க வீரராக ரோகித் சர்மா 159 இன்னிங்ஸ் விளையாடி 28 சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார். ஷதாப் கான் வீசிய ஓவரில் 6, 6, 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியுள்ளார். 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
அவர், இந்தப் போட்டியில் 78 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால், அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து 22 ரன்களில் 10000 ரன்கள் எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
World Cup 2023: ஏப்ரல் 4ல் ஊன்றுகோல் உதவியுடன் வந்த கேன் வில்லியம்சன்; இன்று உலகக் கோப்பை கேப்டன்!
எனினும், கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர், ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டிகளில் 9 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். ஆம், நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்ததன் மூலமாக 9 முறை அவர் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் 9 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்து டெண்டுல்கரது சாதனையை சமன் செய்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்னர்ஷிப் குவித்துள்ளார். நேற்றைய போட்டியில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.