சச்சினை விட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்..? ஆண்டி பிக்கேல் சொல்லும் அதிரடி காரணம்

By karthikeyan VFirst Published May 21, 2019, 2:03 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. அது சரியாக இருக்காது. ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவதே பரவாயில்லை எனுமளவிற்கு, மற்றொரு விவாதமும் கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால் இருவரில் யார் பெஸ்ட் என்பதுதான். 

இந்த கேள்வியை எழுப்புவதே தவறு. ஏனென்றால் வாசிம் அக்ரம், மெக்ராத், முரளிதரன், ஷேன் வார்னே, வக்கார் யூனிஸ், சமிந்தா வாஸ், அக்தர், பிரெட் லீ போன்ற மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். எனவே கோலி சிறந்த வீரர் என்பதன் அடிப்படையில், அவரது பேட்டிங் திறனை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டாலும், இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்வி தவறானதே.

இந்நிலையில், சச்சின் - கோலி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆண்டி பிக்கேல், இருவருக்கும் இடையேயான ஒரு வித்தியாசத்தையும் எந்தவிதத்தில் சச்சினை கோலி டாமினேட் செய்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். 

போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதில் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து கோலி வேறுபடுகிறார். எவ்வளவு கடினமான இலக்கை விரட்டுவதிலும் விராட் கோலி வல்லவர். கடின இலக்கையும் விரட்டி பிடித்து அணியை வெற்றி பெற செய்வதில் கோலி சிறந்தவர் என்று ஆண்டி பிக்கேல் தெரிவித்துள்ளார். 

2003ல் உலக கோப்பையை வென்ற பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆடியவர் ஆண்டி பிக்கேல். அசைக்கமுடியாத சக்தியாக பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலம்வந்த காலத்தில் அந்த அணியின் நட்சத்திர பவுலராக ஜொலித்தவர் ஆண்டி பிக்கேல். 
 

click me!