#PSL2021 செவிட்டில் செம அடி.. ஸ்ட்ரெட்சரில் தூக்கி செல்லப்பட்ட ஆண்ட்ரே ரசல்..! வீடியோ

By karthikeyan VFirst Published Jun 12, 2021, 2:45 PM IST
Highlights

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் ஆடும் ஆண்ட்ரே ரசல் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் ஃபாஸ்ட் பவுலர் முகமது மூசாவின் பந்தில் செவிட்டில் செம அடி வாங்கினார். 
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த 9ம் தேதி முதல் எஞ்சிய போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டுவருகின்றன. 

நேற்றைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குவெட்டா அணி 20 ஓவரில் வெறும் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 134 ரன்கள் என்ற எளிய இலக்கை இஸ்லாமாபாத் அணி விக்கெட் இழப்பின்றி அடித்து ஜெயித்துவிட்டது. இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ காட்டடி அடித்து 36 பந்தில் 90 ரன்களை குவித்ததன் விளைவாக 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இஸ்லாமாபாத் அணி.

இந்த போட்டியில் குவெட்டா அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, 6ம் வரிசையில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல், முகமது மூசா வீசிய 14வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை கொடுத்த மூசா, அடுத்த பந்தை ரசலை நோக்கி பவுன்ஸராக வீச, அது ரசலின் ஹெல்மெட்டில்(ஒருபக்க முகப்பகுதியில்) கடுமையாக தாக்க, வலியால் நிலைகுலைந்த ரசல், தொடர்ந்து பேட்டிங் ஆடினார். ஆனால் அடுத்த பந்திலேயே மூசாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

One must always witness a Dre Russ show. This time cut short by 🪄 l l pic.twitter.com/pemprmMbCj

— PakistanSuperLeague (@thePSLt20)

 

Get Well Soon Andre Russell 🤗
Take Care ❤️ pic.twitter.com/AAakUCnVXJ

— SportsFreak_Sameer (@Sidharth_World_)

பவுன்ஸர் முகப்பகுதியில் கடுமையாக தாக்கியதால் ஸ்ட்ரெட்சரில் வைத்து அழைத்து செல்லப்பட்ட ஆண்ட்ரே ரசலுக்கு கன்கஷன் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 2வது இன்னிங்ஸில் அவருக்கு கன்கஷன் மாற்று வீரராக பவுலர் நசீம் ஷா ஆடவைக்கப்பட்டார். ஆனால் நசீம் ஷாவின் சேர்ப்பு குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை.
 

click me!