நான் பார்த்ததுலயே இவருதான் வித்தியாசமான பவுலர்..! இந்திய பவுலருக்கு லெஜண்ட் ஆம்ப்ரூஸ் புகழாரம்

By karthikeyan VFirst Published May 9, 2021, 7:50 PM IST
Highlights

தான் பார்த்ததிலேயே ஜஸ்ப்ரித் பும்ரா தான் வித்தியாசமான பவுலர் என்று முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் கர்ட்லி ஆம்ப்ரூஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்திய அணி முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங்கில் மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஜஸ்ப்ரித் பும்ரா. துல்லியமான யார்க்கர், நல்ல வேகம், நல்ல வெரைட்டி, பவுலிங்கில் துல்லியம், சாமர்த்தியமான பவுலிங் என ஒரு முழு ஃபாஸ்ட் பவுலராக திகழும் பும்ராவின் வருகைக்கு பிறகு, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் முழுவதுமாகவே வலுப்பெற்றுள்ளது.

பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நடராஜன் என இந்திய அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. இந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்தும் பவுலிங் கேப்டனாக பும்ரா திகழ்கிறார்.

மற்ற ஃபாஸ்ட் பவுலர்களை விட வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட பும்ரா, மிகக்குறைவான தூரமே ஓடிவந்து, 140 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசுவதை கண்டு, இவ்வளவு குறைவான ரன்னப்பில் இவ்வளவு வேகமாக பும்ரா எப்படி வீசுகிறார் என்று முன்னாள் லெஜண்ட் பவுலர்களே ஆச்சரியப்படுமளவிற்கான திறமைசாலி பும்ரா.

அப்படி பும்ராவால் கவரப்பட்டவர்களில் ஒருவரான வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் கர்ட்லி ஆம்ப்ரூஸும் ஒருவர். பும்ரா குறித்து பேசியுள்ள கர்ட்லி ஆம்ப்ரூஸ், இந்திய அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருக்கிறது. நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன். நான் இதுவரை பார்த்ததிலேயே வித்தியாசமான பவுலர் பும்ரா. அவர் இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக அவர் ஆடுவதை பார்க்க விரும்புகிறேன்.

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ரிதம் மிக முக்கியம். சிறப்பாக ஆடுவதற்கு முன், நல்ல ரிதமில் இருப்பது முக்கியம். மிகக்குறைந்த ரன்னப்பில் அருமையாக பந்துவீசுகிறார் என்று ஆம்ப்ரூஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!