என் கிரிக்கெட் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அவருதான்! லெஜண்ட் பவுலர் டொனால்ட் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 19, 2021, 7:22 PM IST
Highlights

தனது கிரிக்கெட் கெரியரில் தான் பந்துவீசியதிலேயே யார் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஃபாஸ்ட் பவுலர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட். 1991ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆலன் டொனால்ட், 2003 ஒருநாள் உலக கோப்பை வரை ஆடினார்.

அந்த குறிப்பிட்ட உலக கோப்பை தொடரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணி துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் ஓய்வு அறிவித்தார் ஆலன் டொனால்ட்.

72 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 330 விக்கெட்டுகளையும், 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 272 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஆலன் டொனால்ட், அவரது கிரிக்கெட் கெரியரில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, அசாருதீன், ஸ்டீவ் வாக், ஸ்டீஃபன் ஃப்ளெமிங், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ளார்.

இந்நிலையில், தனது கெரியரில் தான் பந்துவீசியதிலேயே சிறந்த பேட்ஸ்மேன் குறித்து பேசியுள்ள ஆலன் டொனால்ட்,  சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் டெக்னிக்கில் சிறந்த வீரர். நான் எதிர்த்து ஆடியதிலேயே சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர். தென்னாப்பிரிக்க கண்டிஷனில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களில் அவர் மட்டும் தான் டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன். அவர்  30 ஓவர்கள் களத்தில் நின்றுவிட்டால், அதன்பின்னர் அவரை வீழ்த்துவது மிகக்கடினம். 

மற்றொரு ஜீனியஸ் லாரா. அவர் ஆடும் ஷாட்டுகள் அபாரமாக இருக்கும். அவரை மாதிரி சிறப்பான ஷாட்டுகளை ஆடும் வேறு வீரரை நான் பார்த்ததில்லை. ஆக்ரோஷமாகவும் ஆடுவார் என்று டொனால்ட் தெரிவித்துள்ளார்.
 

click me!