IPL 2024 All Captains List:டிராபியுடன் போஸ் கொடுத்த கேப்டன்கள் – வைரலாகும் எதிர்கால ஜாம்பவான்களின் புகைப்படம்!

By Rsiva kumar  |  First Published Mar 22, 2024, 10:33 AM IST

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளின் கேப்டன்கள் ஒன்றாக டிராபியுடன் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


நடப்பு ஆண்டுக்கான 17ஆவது சீசன் இன்று இரவு 6.30 மணிக்கு தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சோனு நிகம் இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை அரங்கேற்ற இருக்கின்றனர். இதே போன்று தான், அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இருவரும் இணைந்து நடன நிகழ்ச்சியை அரங்கேற்ற இருக்கின்றனர். அதன் பிறகு நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதுவரையில் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்குகிறது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், பஞ்சாப் கிங்ஸ் ஜித்தேஷ் சர்மா தலைமையிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட் கம்மின்ஸ் தலைமையிலும், குஜராத் டைட்டன்ஸ் அணியானது சுப்மன் கில் தலைமையிலும் களமிறங்குகிறது.

Tap to resize

Latest Videos

இது தவிர லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வழக்கம் போன்று கேஎல் ராகுல் தலைமையிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் தலைமையிலும் களமிறங்குகிறது. இது தவிர காயம் காரணமாக கடந்த சீசனில் பங்கேற்காத ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இந்த சீசனில் கேப்டன்களாக களமிறங்குகின்றனர். இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் திரும்ப வந்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக பாப் டூப்ளெசிஸ் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். இந்த நிலையில் தான் ஐபிஎல் 2024 போட்டிக்கு முன்னதாக அனைத்து அணிகளின் கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஐசிசி டிராபியுடன் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இளம் வீரர்கள் தான் அடுத்தடுத்த சீசன்களின் எதிர்காலம் என்றே சொல்லலாம்.

 

Forecast: Whistles! 🥳
Here’s the game day look ahead! 💪🏻🗞️ 🦁💛

— Chennai Super Kings (@ChennaiIPL)

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, டேரில் மிட்செல்,ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மஹீத் தீக்‌ஷனா, மொயீன் அலி, முஷ்தாபிஜூர் ரஹ்மான், மிட்செல் சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, அஜய் ஜதவ் மண்டல், பிரசாந்த் சோலாங்கி, முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், ஆர்எஸ் ஹங்க்ரேகர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அரவெல்லி அவனிஷ் ராவ், டெவோன் கான்வே.

குறிப்பு: டெவோன் கான்வே காயம் காரணமாக இதுவரையில் ஐபிஎல் தொடரில் இடம் பெறாத நிலையில், இனி வரும் போட்டிகளில் அவர் அணியுடன் இணைந்தால் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்பிருக்கிறது. அவருக்குப் பதிலாக மாற்று வீரரையும் அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மகிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசஃப், கரண் சரமா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளே, டாம் கரண், ஸ்வப்னில் சிங், விஜயகுமார் வைஷாக், லாக்கி பெர்குசன், மாயங்க தாகர், வில் ஜாக்ஸ், சுயாஷ் பிரபுதேசாய், அனுஜ் ராவத், மனோஜ் பாடேஜ், யாஷ் தயால், சௌரவ் சௌகான், ராஜன் குமார், ஹிமான்ஸு சர்மா.

click me!