10 பேருமே டக் அவுட்.. சொல்லி வச்ச மாதிரி மொத்த பேரும் போல்டு!! கிரிக்கெட் வரலாற்றில் அரிய போட்டி

Published : May 17, 2019, 12:00 PM IST
10 பேருமே டக் அவுட்.. சொல்லி வச்ச மாதிரி மொத்த பேரும் போல்டு!! கிரிக்கெட் வரலாற்றில் அரிய போட்டி

சுருக்கம்

ஒருவர் கூட ஒரு ரன் கூட அடிக்கவில்லை. 10 பேரும் சொல்லி வைத்தாற்போல போல்டாகி வெளியேறியுள்ளனர். 

மகளிர் போட்டி ஒன்றில் 10 பேருமே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளனர். 

கேரளாவில் மாநில அளவிலான 30 ஓவர் மகளிர் போட்டியில் காசர்கோடு மற்றும் வயநாடு அணிகள் மோதியுள்ளன. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய காசர்கோடு அணியின் 10 வீராங்கனைகளும் டக் அவுட்டாகியுள்ளனர். 

ஒருவர் கூட ஒரு ரன் கூட அடிக்கவில்லை. 10 பேரும் சொல்லி வைத்தாற்போல வயநாடு பவுலர்களால் போல்டு செய்யப்பட்டு வெளியேறியுள்ளனர். வயநாடு பவுலர்கள் போட்ட நான்கு எக்ஸ்ட்ராஸ் தான் காசர்கோடு அணியின் ஸ்கோரே. 5 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வயநாடு அணி வென்றது. 

மாநில அளவிலான மகளிர் போட்டிதான் என்றாலும், 10 பேருமே டக் அவுட்டாகியிருப்பது கிரிக்கெட் வரலாற்றில் அரிய சம்பவம்தான். 
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!