தப்பித்தவறி கூட விஜய் சங்கரை இறக்கிடாதீங்க.. இவரு ஏன் இவ்வளவு பதறுறாரு..?

By karthikeyan VFirst Published May 17, 2019, 10:50 AM IST
Highlights

உலக கோப்பை இன்னும் 13 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 22ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்பட்டு செல்கிறது. 
 

உலக கோப்பை இன்னும் 13 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 22ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்பட்டு செல்கிறது. 

இந்திய அணியில் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பராக யார் தேர்வாகப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நான்காம் வரிசையை மனதில் வைத்து விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்தது தேர்வுக்குழு. இந்த இரண்டு தேர்வுகளுக்குமே கேப்டன் விராட் கோலி ஆதரவுதான் தெரிவித்தார். 

ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நம்பிக்கையளிக்கும் விதமாக ஆடியதாலும் அவர் அணியில் இருந்தால் கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சனும் கிடைக்கும் என்பதால் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். 

விஜய் சங்கர் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை நான்காம் வரிசையில் இறக்க வாய்ப்புள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட பல முன்னாள் வீரர்களும் இன்னும் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். 

விஜய் சங்கர் - ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் இறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ள நிலையில், விஜய் சங்கரை இறக்கக்கூடாது என்பதை மறைமுகமாக அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார். 

நான்காம் வரிசை குறித்து பேசியுள்ள திலீப், நான்காம் வரிசை முக்கியமான வரிசை என்பதால் அதில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனைத்தான் இறக்க வேண்டும். அந்த வகையில் ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரான ராகுல், நான்காம் வரிசைக்கு சரியாக இருப்பார். ஒருவேளை தொடக்க விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிடும் பட்சத்தில் ராகுல் அணிக்கு வலுசேர்ப்பார். எனவே ராகுல் தான் சரியான வீரர் என்று திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். 

அவர் ராகுலை இறக்க வேண்டும் என்று கூறியுள்ள கருத்தில் விஜய் சங்கரை இறக்கிவிடக்கூடாது என்ற தகவல் அழுத்தம் திருத்தமாக உள்ளது. ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்று ஒரு வார்த்தையை அழுத்தமாக குறிப்பிடுகிறார். விஜய் சங்கர் முன்பைவிட பேட்டிங்கில் நன்கு மேம்பட்டு சிறப்பாக ஆடினாலும் அவர் மூலம் ஒரு பவுலிங் ஆப்சன் கூடுதலாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் அணியில் எடுக்கப்பட்டவர். ஆனால் ராகுல் ஒரு பேட்ஸ்மேன். விஜய் சங்கர் அப்படி கிடையாது; பேட்டிங்கும் ஆடுவார். எனவேதான் விஜய் சங்கரை இறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும்வகையில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

click me!