உலக கோப்பை அணியில் இருந்து தொடக்க வீரர் அதிரடி நீக்கம்

Published : Apr 29, 2019, 03:45 PM IST
உலக கோப்பை அணியில் இருந்து தொடக்க வீரர் அதிரடி நீக்கம்

சுருக்கம்

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. நல்ல பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து அணி உள்ளது.  

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.

உலக கோப்பைக்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. நல்ல பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து அணி உள்ளது.

இந்நிலையில், உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மீது உற்சாக போதை மருந்து எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. ஒவ்வொரு தொடர் முடிந்ததுமே இங்கிலாந்து வீரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ராயல் லண்டன் போட்டிகளிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கூறி பாதியில் விலகியிருந்தார். ஆனால் போதை மருந்து எடுத்துக்கொண்டததற்காக அவருக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டதாகவும் அதனால் தான் அவர் அந்த தொடரிலிருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் உற்சாக போதை மருந்து உட்கொண்டது உண்மைதான் என்று தெரியவந்ததை அடுத்து, உலக கோப்பை அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் அலெக்ஸ் ஹேல்ஸ். உலக கோப்பை நேரத்தில் அணியின் சூழலில் இது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அவரை அதிரடியாக நீக்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

அவருக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் அல்லது ஃபோக்ஸ் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. ஏற்கனவே மதுபான விடுதியில் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு 6 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
ICC Rankings: ஐசிசி தரவரிசையில் மாஸ் காட்டிய கில்... பும்ராவின் No.1 இடத்துக்கு வந்த நியூசி. வீரர்!