இதைவிட கேவலமான ஒரு ஃபீல்டிங்கை பார்த்துருக்க மாட்டீங்க.. வீடியோ

Published : Mar 16, 2020, 05:12 PM IST
இதைவிட கேவலமான ஒரு ஃபீல்டிங்கை பார்த்துருக்க மாட்டீங்க.. வீடியோ

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வீரர் அகிஃப் ஜாவேத்  படுமோசமாக ஃபீல்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.   

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடேட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவரில் 136 ரன்கள் அடித்தது. 

137 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஷர்ஜீல் கான் 14 பந்தில் 37 ரன்களை விளாசி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். பாபர் அசாம், இமாத் வாசிம் ஆகியோர் சரியாக ஆடவில்லை. எனினும் ஷர்ஜீல் கானின் அதிரடியான பேட்டிங்காலும், இலக்கு குறைவானது என்பதாலும் கடைசி ஓவரில் இலக்கை எட்டி கராச்சி அணி வெற்றி பெற்றது. 

இதில் கராச்சி அணியின் இன்னிங்ஸின் போது, ஏழாவது ஓவரில் இமாத் வாசிம் தேர்டுமேன் திசையில் அடித்த பந்தை எளிதாக பிடித்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் கூட கஷ்டமில்லாத, மிகவும் எளிதான ஃபீல்டிங்கை கூட சரியாக பண்ணாமல், இரண்டு கால்களுக்கு இடையே அந்த பந்தை விட்டார் அகிஃப் ஜாவேத். அதனால் அது பவுண்டரிக்கு சென்றது. இவ்வளவு மோசமான ஃபீல்டிங்கை பார்ப்பது அரிதினும் அரிது.. அந்த வீடியோ இதோ.. 

Also Read - டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் தகுதியும் திராணியும் அவருக்கு மட்டும்தான் இருக்கு! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!