Ajinkya Rahane: ஓய்வுபெற்ற ரஹானே..! BCCIயிடம் பெறப்போகும் ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா..?

Published : Aug 04, 2026, 01:04 PM IST
Ajinkya Rahane

சுருக்கம்

85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே, ஓய்வுக்குப் பிறகு பிசிசிஐ-யின் உயர்மட்ட ஓய்வூதியப் பிரிவில் இடம்பெற உள்ளார்.

இந்திய அணிக்காக வெளிநாட்டு மைதானங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு விளையாடிய மூத்த வீரரான அஜிங்க்யா ரஹானே, ஜூலை 30-ஆம் தேதி தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு விடை கொடுத்தார். 2020-21-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, விராட் கோலி இல்லாத நிலையில் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு, இந்திய அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று கொடுத்த பெருமை ரஹானேவுக்கு உண்டு.

கிரிக்கெட் உலகில் மிகுந்த மரியாதையைப் பெற்ற வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ரஹானே, தனது விளையாட்டு வாழ்க்கையை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த கட்ட வாழ்க்கைக்கான புதிய வாய்ப்புகளை தேடும் நிலையில் உள்ளார். இருப்பினும், ஓய்வுக்குப் பிறகு அவருக்கு பிசிசிஐ சார்பில் நிதி ரீதியான ஆதரவு கிடைக்க உள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் பிசிசிஐ மாற்றங்களை அறிவித்தது. இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, உயர்மட்ட ஓய்வூதியப் பிரிவில் இடம்பெறுகிறார்.

இதன்படி, அவருக்கு மாதம் ரூ.70,000 ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு முன்பு, இதே பிரிவில் இருந்த வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொகை ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த ஓய்வூதியத் தொகை உயர்வு தொடர்பான முடிவு, முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய சௌரவ் கங்குலி, "முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம். வீரர்கள்தான் கிரிக்கெட்டின் அடிப்படை. அவர்கள் விளையாடிய காலத்திற்குப் பிறகும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஒரு வாரியத்தின் கடமை" என்று தெரிவித்திருந்தார்.

இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, தனது அடுத்த கட்ட பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், இளம் தலைமுறை வீரர்களை உருவாக்குவதிலும், அவர்களுக்கு வழிகாட்டுவதிலும் ஆர்வம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிசிசிஐ-யில் அவர் அதிகாரப்பூர்வ பொறுப்பை ஏற்கும் வரை மட்டுமே இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். எதிர்காலத்தில் அவர் பிசிசிஐ நிர்வாகியாகவோ அல்லது பயிற்சியாளராகவோ நியமிக்கப்பட்டு சம்பளம் பெறும் நிலை ஏற்பட்டால், அந்த காலகட்டத்தில் அவரது ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: தோனியுடன் ரகசிய சந்திப்பா? மும்பையை விட்டு சென்னைக்கு வரும் ஹர்திக் பாண்டியா!
Abhishek Sharma: சரவெடியாக வெடித்து சிதறிய அபிஷேக்..! 91 பந்துகளில் 25 சிக்சர், 233 ரன்கள் குவிப்பு