#IPL2021 இதனால் தான் உனக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கல.! இந்த சீசனிலும் இனிமேல் ஆட சான்ஸ் கிடைக்காது

Published : Apr 15, 2021, 04:04 PM IST
#IPL2021 இதனால் தான் உனக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கல.! இந்த சீசனிலும் இனிமேல் ஆட சான்ஸ் கிடைக்காது

சுருக்கம்

மனீஷ் பாண்டேவிற்கு இனிமேல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல்லில் முதல் சதமடித்த வீரர் மனீஷ் பாண்டே. ஆனாலும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேட்ச் வின்னராக அவர் ஜொலித்ததேயில்லை. அரைசதங்களை அடிக்கும் மனீஷ் பாண்டே, அணிக்காக போட்டிகளை வென்று கொடுப்பதில்லை.

இந்த சீசனின் முதல் போட்டியில் கேகேஆருக்கு எதிராக அரைசதம் அடித்து 44 பந்தில் 61 ரன்களை அடித்து கடைசி வரை களத்தில் நின்றபோதிலும் சன்ரைசர்ஸ் அணி தோல்வியைத்தான் தழுவியது. அதேபோல ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 6 ஓவர்களை முழுமையாக ஆடி நன்றாக செட்டில் ஆகிவிட்டபோதிலும், போட்டியை முடித்துக்கொடுக்காமல் 39 பந்தில் 38 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

மனீஷ் பாண்டே நன்றாக செட்டில் ஆகி போட்டியை முடித்துக்கொடுக்காமல் ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில்,  அவரை முன்னாள் வீரர்கள் ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் அஜய் ஜடேஜா ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

மனீஷ் பாண்டே குறித்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, மனீஷ் பாண்டே செட்டில் ஆகிவிட்டாலும் அவரால் நெருக்கடியான சூழல்களை கையாள முடியவில்லை. அதனால் தான் அவருக்கு பிறகு வந்த ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டபோதிலும், மனீஷ் பாண்டேவால் அவரது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்றார். 

இதையடுத்து மனீஷ் பாண்டே குறித்து பேசிய அஜய் ஜடேஜா, சன்ரைசர்ஸ் அணி மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைவான இலக்கை விரட்டும்போது வில்லியம்சன் அணியை இருமடங்கு வலுப்படுத்துவார். களத்தில் செட்டில் ஆகிவிட்டால், போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கும் வீரரை அணியில் சேர்க்க வேண்டும். மனீஷ் பாண்டேவிற்கு இனிமேல் சன்ரைசர்ஸ் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்று ஜடேஜா தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!