#RRvsDC ராயல்ஸை அடிச்சு தூக்கணும்.! வெற்றி வேட்கையில் களமிறங்கும் கேபிடள்ஸின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 15, 2021, 2:44 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணியை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே டாப் ஃபார்மில் உள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட்டும் செம ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கிறார். பவுலிங்கில் சீனியர் ஸ்பின்னர்கள் அஷ்வின், அமித் மிஷ்ரா ஆகியோரும் ஃபாஸ்ட் பவுலிங்கில் வோக்ஸ், டாம் கரன், ஆவேஷ் கான் ஆகியோரும் உள்ளதால், நல்ல காம்பினேஷனுடன் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, வெற்றி முனைப்பில் களமிறங்குகிறது.

நோர்க்யா கொரோனா காரணமாக ஆடமாட்டார். குவாரண்டினில் இருந்த ரபாடா ஆடுவது குறித்த தகவலும் இல்லை. எனவே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் டெல்லி கேபிடள்ஸ் அணி களமிறங்கும். 

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா, டாம் கரன், ஆவேஷ் கான். 
 

click me!