
கிரிக்கெட் உலகக் கோப்பையானது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியானது எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக நடக்க இருந்த உலகக் கோப்பை தொடக்க விழாவானவது ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக, 10 அணிகளின் கேப்டன்களின் மீட்டிங் மட்டுமே நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தான் உலகக் கோப்பை விழாவை, வரும் 14 ஆம் தேதி நடத்த இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக வரும் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக உலகக் கோப்பை விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஐசிசி ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்காக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானமானது தயார் செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. மெட்ரோ ரயில் அறிவித்த சூப்பர் ஆஃபர்..!
இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், அரிஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோரது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நிலையில், இந்த இசை நிகழ்ச்சியானது பிற்பகல் 12.30 மணிக்கு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.30 மணி வரையில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்னிங்ஸ் பிரேக்கின் போது 10 நிமிட நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
இந்த நிகழ்ச்சிக்கும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கும், சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வருண் தவான் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி மற்றும் பிரபலங்களின் வருகை காரணமாக அகமதாபாத்தில் மட்டும் குஜராத் போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் உள்பட மொத்தம் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் நடந்த 10 லீக் போட்டிகளில் சென்னையில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே ரசிகர்களின் வருகை அதிகளவில் இருந்துள்ளது. ஆனால், மற்ற மைதானங்களான ஹைதராபாத், டெல்லி, தரமசாலா ஆகிய மைதானங்களில் நடந்த போட்டிகளில் ரசிகர்களின் வருகையானது போதுமானதாக இல்லை. இதன் காரணமாக மைதானங்கள் வெறிச்சோடி காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!