
கடந்த ஜூன் 29 ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் டிராபியோடு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதல் டி20 போட்டியிலேயே உலக சாம்பியனை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த ஜிம்பாப்வே!
அவருடன் டி20 டிராபியோடு போட்டோஷுட் எடுத்துக் கொடுத்தனர். சிறிது நேர கலந்துரையாடலுக்கு பிறகு விருந்து அருந்திய பிறகு டெல்லியிலிருந்து மும்பை பறந்தனர். மும்பையில் மெரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர். கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேசினர். இதையடுத்து இந்திய அணிக்கான ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதன் பிறகு டான்ஸ் ஆடி இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தான், மெரைன் டிரைவில் டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாடத்திற்கு குவிந்த லட்சக்கணக்காக ரசிகர்களால் அந்தப் பகுதி முழுவதும் 11,500 கிலோ கழிவுகளால் சேர்ந்தது.
இதனை அகற்றும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மும்பை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இந்த தூய்மை பணியானது காலை 8 மணி வரையிலும் நடைபெற்றுள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: கழிவுகளை அகற்றுவதில் கவனம் செலுத்தும் வகையில் காம்பாக்டர்கள், டம்ப்பர்கள் மற்றும் பிரத்யேகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்திய அணியின் வெற்றி ஊர்வலம் முடிந்த பிறகு மெரைன் டிரைவ் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சிப் ரேப்பர்கள், கப்புகள், பேப்பர், துணிகள், ஷூ மற்றும் செருப்புகள் வரை குப்பைகளால் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக நேரத்தை வீணடிக்காமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மும்பை மாநகராட்சி பணியாளர்கள் இரவு முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
Zimbabwe vs India 1st T20I: ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் சுழலில் 115 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே!
இறுதியாக 11.5 மெட்ரிக் டன் கழிவுகளை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர் என்று கூறினார். மேலும், இதில், இங்கு சேகரிக்கப்பட்ட மறு சுழற்சி செய்ய கூடிய பொருட்களை மறு சுழற்சிக்கு அனுப்ப மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தான் மெரைன் டிரைவில் வெள்ளிக்கிழமை காலையில் நடைபயிற்சிக்கு வந்த நெட்டிசன்கள் குப்பைகள் அகற்றப்பட்டிருப்பது கண்டு தூய்மை பணியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.