ஒவ்வொரு அணியும், தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிட்ட நிலையில், அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ரூ.40.75 கோடி பர்ஸ் தொகையாக வைத்திருக்கிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலுக்கான கடைசி வாய்ப்பும் முடிந்த நிலையில், டிரேடிங் முறை மட்டும் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் வழக்கத்தில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
மினி ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு வீரரும் டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்வதற்க் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதற்கு உதாரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது அதிகபட்சமாக பர்ஸ் தொகையாக ரூ.40.75 கோடி வைத்துள்ளது.
இரண்டாவது அதிகபட்ச தொகையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.34 கோடி கையில் வைத்திருக்கிறது, மூன்றாவதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.32.7 கோடி உள்ளது. 4ஆவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.31.4 கோடி வைத்துள்ளது. 5ஆவதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.29.1 கோடியும், 6ஆவதாக, டெல்லி கேபிடல்ஸ் ரூ.28.95 கோடியும் வைத்துள்ளன. அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15.25 கோடி வைத்துள்ளது.
அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.13.9 கோடியும், குஜராத் டைட்டன்ஸ் ரூ.13.8 கோடியும் வைத்துள்ளன. குறைந்த தொகையை குஜராத் டைட்டன்ஸ் அணி