எல்லாத்துக்கும் ஐபிஎல் தான் காரணம்.. அஃப்ரிடி அதிரடி

By karthikeyan VFirst Published Jun 17, 2019, 5:31 PM IST
Highlights

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சொதப்பி தோல்வியை தழுவியது. 
 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை விட, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பரபரப்பே இல்லாமல் ஒருதலைபட்சமான போட்டியாகவே முடிந்துவிட்டது. 337 ரன்களை குவித்த இந்திய அணி, வெறும் 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சொதப்பி தோல்வியை தழுவியது. 

பாகிஸ்தான் அணி அனைத்திலுமே சொதப்பிய அதேவேளையில், இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தியது. உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதே இல்லை என்ற சாதனையை தக்கவைத்தது இந்திய அணி. இந்த போட்டியுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 7 முறை இந்திய அணியிடம் அடி வாங்கியுள்ளது பாகிஸ்தான். 

இந்தியாவுக்கு எதிரான தோல்வி பாகிஸ்தான் முன்னாள் வீரர்களை கடுப்பாக்கியுள்ளது. பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததை கடுமையாக விமர்சித்த அக்தர், சர்ஃபராஸை மூளையில்லாத கேப்டன் என்று விமர்சித்தார். 

ஆனால் பாகிஸ்தான் அணியை விமர்சிக்காமல் இந்திய அணியை பாராட்டியுள்ள அஃப்ரிடி, இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்துக்கு ஐபிஎல் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட டுவீட்டில், ஐபிஎல் இளம் வீரர்களை இனம்காண மட்டும் பயன்படவில்லை. நெருக்கடியான சூழலை கையாண்டு ஆடவும் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 
 

click me!