இங்கிலாந்து அணிக்கு அடி மேல் அடி.. காயத்தால் விலகும் அதிரடி வீரர்.. கேப்டன் மோர்கனுக்கும் காயம்

Published : Jun 17, 2019, 05:26 PM IST
இங்கிலாந்து அணிக்கு அடி மேல் அடி.. காயத்தால் விலகும் அதிரடி வீரர்.. கேப்டன் மோர்கனுக்கும் காயம்

சுருக்கம்

இந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையானதாக பார்க்கப்படும் இங்கிலாந்து அணி, அந்த அணியின் மீதான நம்பிக்கையை சிதைக்கவில்லை. இதுவரை சிறப்பாகவே ஆடியுள்ளது. 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது.   

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த அணிகளுக்கு எதிர்மறையாக மற்ற அணிகள் படுமோசமாக ஆடிவருகின்றன. 

இந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையானதாக பார்க்கப்படும் இங்கிலாந்து அணி, அந்த அணியின் மீதான நம்பிக்கையை சிதைக்கவில்லை. இதுவரை சிறப்பாகவே ஆடியுள்ளது. 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செம ஃபார்மில் இருக்கும் தொடக்க வீரர் ஜேசன் ராய் அடுத்த 2 போட்டிகளில் ஆடுவது சந்தேகம். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது ராய்க்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த போட்டியில் அவர் பேட்டிங் ஆடவில்லை. தொடை காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு போட்டிகளிலும் அவர் ஆடமாட்டார் என தெரிகிறது.

அந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனும் காயமடைந்தார். எனவே அவரது உடற்தகுதியும் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மோர்கன் நாளை நடக்க உள்ள ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவது சந்தேகம் தான். எனவே ஜோஸ் பட்லரின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி ஆடக்கூடும். ஒரே நேரத்தில் கேப்டன் மோர்கன் மற்றும் தொடக்க வீரர் ராய் ஆகிய இருவரும் காயமடைந்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவுதான். எனினும் அடுத்த 2 போட்டிகள் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரானதுதான் என்பதால் பெரிய பாதிப்பாக இருக்காது. 

ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார். 
 
PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!