உங்ககிட்ட எக்ஸ்ட்ரா கவர் கூட இல்லையாடா..? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை தெறிக்கவிட்ட கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jun 17, 2019, 5:22 PM IST
Highlights

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த உலக கோப்பை தொடரில், வீரர்களை விளையாட விடாமல் மழை புகுந்து விளையாடுகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி உட்பட 4 போட்டிகள் கைவிடப்பட்டன.
 

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த உலக கோப்பை தொடரில், வீரர்களை விளையாட விடாமல் மழை புகுந்து விளையாடுகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி உட்பட 4 போட்டிகள் கைவிடப்பட்டன.

இங்கிலாந்தில் பெய்துவரும் மழையால் தொடர்ந்து போட்டிகள் ரத்தாவது, ரசிகர்களுக்கும் அணிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் கூட மழை குறுக்கிட்டது. 

இங்கிலாந்தின் வானிலை கணிக்க முடியாதது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும். அது தெரிந்தும்கூட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது முன்னாள் ஜாம்பவான்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை மூட பயன்படுத்தப்படும் கவர்களை வைத்து மைதானம் முழுவதையுமே மூட முடியும். அதை பயன்படுத்தினால் மழை நின்ற அடுத்த 10 நிமிடங்களில் போட்டியை தொடங்கிவிட முடியும் என்பதால் அதை பயன்படுத்த வேண்டும் என்று கங்குலி அறிவுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், கவாஸ்கரும் இதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், மழையால் போட்டிகள் தடைபடுவதற்கு யார் பொறுப்பு. உலக கோப்பை தொடரை நடத்துவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அப்படியிருக்கையில், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மைதானத்தை சனிக்கிழமை மூடி வைக்கவில்லை. உலக கோப்பை என்பது கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடர். இங்கிலாந்து கண்டிஷன் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் மைதானத்தை மூட கூடுதல் கவர்கள் இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!