T20 World Cup: Afghanistan vs Pakistan டாஸ் ரிப்போர்ட்..! ஆஃப்கானிஸ்தான் அணியின் துணிச்சலான முடிவு

Published : Oct 29, 2021, 07:25 PM IST
T20 World Cup: Afghanistan vs Pakistan டாஸ் ரிப்போர்ட்..! ஆஃப்கானிஸ்தான் அணியின் துணிச்சலான முடிவு

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடக்கிறது. 

சூப்பர் 12 சுற்றில் முதல் 2 போட்டிகளிலும் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது பாகிஸ்தான் அணி. ஆஃப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியும் இதுவரை டி20 கிரிக்கெட்டில் ஒரேயொரு முறை மட்டுமே மோதியுள்ளன. 2013ல் நடந்த அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. 

இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வெற்றி பயணத்துக்கு ஆஃப்கானிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்கும்பட்சத்தில், புள்ளி பட்டியல் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி துணிச்சலாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஏனெனில் இதுவரை இந்த உலக கோப்பை தொடரில் ஆடிய போட்டிகளில் ஒரேயொரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும், 2வது பேட்டிங் ஆடி இலக்கை விரட்டிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் பேட்டிங் ஆடி வென்ற ஒரேஅணி  ஆஃப்கானிஸ்தான் தான். ஸ்காட்லாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 

2வது இன்னிங்ஸில் பனி காரணமாக பந்துவீசுவது கடினமாக இருக்கும். ஆனாலும் தங்கள் பவுலர்கள் மீது நம்பிக்கை வைத்து துணிச்சலாக முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகின்றன.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ்,ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப்.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி (கேப்டன்), குல்பாதின் நைப், ரஷீத் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான்.
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!