பயம் காட்டிய குல்பதீன் நைப் – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரோகித் சர்மா – ஆப்கானிஸ்தான் 172 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Jan 14, 2024, 8:53 PM IST

இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.


ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்ஓது இந்தூரில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்குப் பதிலாக விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற்றனர். இதே போன்று ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷாவிற்குப் பதிலாக நூர் அகமது அணியில் இடம் பெற்றார்.

ஊர் ஊரா சுத்தி அடி மேல அடி வாங்கும் பாகிஸ்தான் – எப்போது தான் மீளுமோ? 2ஆவது டி20யிலும் தோல்வி!

Latest Videos

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக தொடங்கினர். ஆனால், அதற்குள்ளாக குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்பதீன் நைப் அதிரடியை காட்ட ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. எனினும், ஜத்ரன் 8 ரன்களில் வெளியேற அடுத்து வந்த அஸ்மதுல்லா உமர்சாய் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Shubman Gill: ரன் அவுட் ஆனதுக்கு பழி தீர்த்தாரா ரோகித் சர்மா? சுப்மன் கில் நீக்க என்ன காரணம்?

சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தாலும் நைப் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்த போது அக்‌ஷர் படேல் வர வைத்து அவரது கேட்சை பிடித்தார் ரோகித் சர்மா. பின்னர் வந்த நஜிபுல்லா ஜத்ரன் 23 ரன்களும், கரீம் ஜனத் 20 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 21 ரன்களும் எடுத்துக் கொடுக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

India vs Afghanistan: கில், திலக் வர்மா நீக்கம்; கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு – இந்தியா பவுலிங்!

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னாய் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷிவம் துபே ஆகியோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

click me!