பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சரித்திர வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி அந்நாட்டு மக்களும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 22ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 282 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்தார். அப்துல்லா ஷபீக் 58 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க பலம் வாய்ந்த பாகிஸ்தான் பவுலர்கள் திணறி வந்தனர்.
இதில், குர்பாஸ் 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹ்மத் ஷா, ஜத்ரன் உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இதில், ஜத்ரன் 113 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து 13 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 45 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 48 ரன்கள் சேர்த்தார். ரஹ்மத் ஷா 84 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 77 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. மேலும், 7 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 2 ஆவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.
முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் டிரெஸிங் ரூமில் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். டிரெஸிங் ரூமில் உற்சாகமாக டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளனர். இவ்வளவு ஏன், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மைதானத்திலேயே இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இர்பான் பதான் உடன் உற்சாகமாக டான்ஸ் ஆடியுள்ளார். இதையடுத்து சென்னையில் தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு மைதானத்தில் வலம் வந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
This dance will burn alive porkistani forever😂😂
Wel played Afghanistan🇦🇫
Shame on you porkistan 💩, now only wait for kudrat ka nizam. 😂😂 pic.twitter.com/YV1YDiXFTS
இந்த நிலையில், வரும் 30 ஆம் தேதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 30ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக சென்னையிலிருந்து இன்று காலை ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேருந்தில் விமான நிலையம் சென்றனர். செல்லும் வழியில் பேருந்திலேயே லுங்கு டான்ஸ் லுங்கி டான்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Afghanistan Cricket Fans and Supporters are celebrating this massive win over @TheReaPCB on the streets of Kabul! 🤩👏🎊 | | | pic.twitter.com/JZ2Rb0S4C9
— Afghanistan Cricket Board (@ACBofficials)