அவங்களும் கூப்பிடுவாங்க, நானாகவும் போவேன் – லைகா கோவை கிங்ஸிற்கு ஆதரவாக வந்த நடிகர் சதீஷ்!

By Rsiva kumar  |  First Published Jul 17, 2024, 10:55 PM IST

கோவையில் நடைபெற்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க காமெடி நடிகர் சதீஷ் வருகை தந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.


லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் 2024 தொடரின் 15ஆவது லீக் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லைகா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி திருச்சி சோழாஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், போட்டியின் 2ஆவது ஓவரிலேயே அர்ஜூன் மூர்த்தி 3 ரன்னுக்கு ரன் அவுட்டானார். அதன் பிறகு திருச்சி அணி வீரர்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். வசீம் அகமது 17 ரன்களும், ஷியாம் சுந்தர் 5 ரன்னும், கேப்டன் ஆண்டனி தாஸ் 0 ரன்னும், பிஎஸ் நிர்மல் குமார் 3 ரன்னும், சரவண குமார் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

117 விளையாட்டு வீரர்கள், 140 ஆதரவு ஊழியர்கள் – ஒலிம்பிற்கான பட்டியலை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்!

Tap to resize

Latest Videos

அப்போது திருச்சி அணி 9.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து சஞ்சய் யாதவ் மற்றும் ஜாஃபர் ஜமால் இருவரும் கூட்டணி சேர்ந்து 7ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தனர். இதில் சஞ்சய் யாதவ் 34 ரன்கள் எடுக்க அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே ஜமால் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 41 ரன்கள் எடுத்தார். இறுதியாக திருச்சி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கேப்டன் ஷாருக்கான் மற்றும் முகமது தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். யுதீஷ்வரன் மற்றும் சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

மூட்ட முடிச்ச கட்டிக் கொண்டு செர்பியா புறப்பட்ட நடாசா ஸ்டான்கோவிச் – ஹர்திக் பாண்டியா விவாகரத்து உண்மையா?

பின்னர் எளிய இலக்கை துரத்திய லைகா கோவை கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் சுரேஷ் குமார் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 4 ரன்களில் வெளியேற சுஜய் மற்றும் முகிலேஷ் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சுஜய் 48 ரன்கள் எடுக்க, முகிலேஷ் 63 ரன்கள் எடுத்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது விளையாடிய 4 போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ICC T20I Batting Rankings –ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை பார்ப்பதற்கும், லைகா கோவை கிங்ஸ் அணிக்கு ஆதரவாகவும் காமெடி நடிகர் சதீஷ் கோயம்புத்தூர் வருகை தந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அவங்க கூப்பிட்டாலும் வருவேன், நானாகவும் வருவேன் என்று கூறியுள்ளார். மேலும், டிஎன்பிஎல் ஐபிஎல் அளவிற்கு பெரிதாக வளர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Actor Sathish back to TNPL supporting the defending champions! pic.twitter.com/wOccWbUTaj

— TNPL (@TNPremierLeague)

 

click me!