#ZIMvsPAK 2வது டெஸ்ட்: அபித் அலி - அசார் அலி அபார சதம்..! முதல் நாள் ஆட்ட ரிப்போர்ட்

Published : May 07, 2021, 09:59 PM ISTUpdated : May 07, 2021, 10:01 PM IST
#ZIMvsPAK 2வது டெஸ்ட்: அபித் அலி - அசார் அலி அபார சதம்..! முதல் நாள் ஆட்ட ரிப்போர்ட்

சுருக்கம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணி, அபித் அலி மற்றும் அசார் அலியின் அபார சதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்துள்ளது.  

பாகிஸ்தான் அணி  ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற  பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலியும் இம்ரான் பட்டும் இறங்கினர். இம்ரான் பட் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அபித் அலியுடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.

அபித் அலி - அசார் அலி இணைந்து மிகச்சிறப்பாக ஆடி இருவருமே சதமடிக்க, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 246 ரன்களை குவித்து கொடுத்தனர். அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், ஃபவாத் ஆலம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி சதமடித்த தொடக்க வீரர் அபித் அலி, முதல் நாள் ஆட்ட முடிவில் 118 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!