IPL 2023: அபிஷேக் ஷர்மா, கிளாசன் அதிரடி அரைசதங்கள்..! டெல்லி கேபிடள்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்

By karthikeyan V  |  First Published Apr 29, 2023, 9:30 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அபிஷேக் ஷர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகிய இருவரது அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 197 ரன்களை குவித்து, 198 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இந்த சீசனில் 3வது வெற்றியை எதிர்நோக்கி இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. 

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Latest Videos

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஹாரி ப்ரூக், மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், அகீல் ஹுசைன், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

IPL 2023: ஐபில்லில் தனித்துவமான, கஷ்டமான சாதனையை செய்த ரஷீத் கான்.! தோனி, கோலி மாதிரி பிளேயர்ஸே செய்யாத சாதனை

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், அக்ஸர் படேல், ரிப்பல் படேல், அன்ரிக் நோர்க்யா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார். 

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால்(5), ராகுல் திரிபாதி(10), கேப்டன் மார்க்ரம்(8) மற்றும் ஹாரி ப்ரூக்(0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடி அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா 36 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 67 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

IPL 2023: தோனி மாதிரியே கேப்டன்சி செய்து அசத்துகிறார் ஹர்திக் பாண்டியா..! அவரோட தனித்துவமே இதுதான் - கவாஸ்கர்

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து நிலைத்து நின்று அடித்து ஆடிய ஹென்ரிச் கிளாசன் 27 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 53 ரன்களை விளாசி கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். அப்துல் சமாத்(28) மற்றும் அகீல் ஹுசைன் (16) ஆகிய இருவரும் சிறிய பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 197 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 198 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. டெல்லி மைதானத்தில் இது கடினமான இலக்கே.
 

click me!