நான் எதிர்கொண்டதுலயே கடினமான பவுலர் அவருதான்..! ஆரோன் ஃபின்ச் அதிரடி

Published : Jun 03, 2021, 03:46 PM IST
நான் எதிர்கொண்டதுலயே கடினமான பவுலர் அவருதான்..! ஆரோன் ஃபின்ச் அதிரடி

சுருக்கம்

ஆரோன் ஃபின்ச் தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர் யார் என்று தெரிவித்துள்ளார்.  

ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர். 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய டி20 அணியில் அறிமுகமான ஃபின்ச், 2013ல் ஒருநாள் அணியிலும் 2018ல் டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார். 

ஆஸி., டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடிக்க முடியாத ஃபின்ச், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முதன்மை தொடக்க வீரராக திகழ்கிறார். 132 ஒருநாள், 71 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7000க்கும் அதிகமான ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார் ஃபின்ச்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, 2018லிருந்து ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருந்து அணியை வெற்றிகரமாக வழிநடத்தியும் வருகிறார். 2019 உலக கோப்பையில் ஆஸி., அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றார்.

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஃபின்ச், தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர் பாகிஸ்தான் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் தான் என்று கூறியுள்ளார்.

சயீத் அஜ்மல் 2008லிருந்து 2015 வரை பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட், 113 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய அணியின் டாப் ஸ்பின்னர் திடீர் ஓய்வு.. இன்ஸ்டாவில் உருக்கம்.. ரசிகர்கள் ஷாக்!
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலகளாவிய அங்கீகாரம்.. 'TIME 100 Next' பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி.. மெகா சாதனை!