அந்த பையனை ஏன் டீம்ல இருந்து தூக்குனீங்க?இந்திய அணியின் முடிவு எனக்கு சர்ப்ரைஸா இருக்கு!முன்னாள் வீரர் ஆதங்கம்

By karthikeyan VFirst Published Jan 23, 2022, 5:58 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயரை அணியிலிருந்து நீக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-0 என தொடரை வென்றது. 

முதலிரண்டு போட்டிகளிலுமே பேட்டிங், பவுலிங் என அனைத்து விதத்திலும் பெரியளவில் சோபிக்காத இந்திய அணி தொடரை இழந்து அதிருப்தியளித்தது. இந்நிலையில், இன்று கேப்டவுனில் நடந்துவரும் 3வது ஒருநாள் போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆகாமல், ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்கிய இந்திய அணி ஆடும் லெவன் காம்பினேஷனில் 4 மாற்றங்களை செய்தது.

முதல் 2 போட்டிகளிலும் 6வது பவுலிங் ஆப்சனாக அணியில் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார். அஷ்வினுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். ஷர்துல் தாகூர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு பதிலாக தீபக் சாஹர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயரை உட்காரவைத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, வெங்கடேஷ் ஐயரை ஆடவைக்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவரை ஒதுக்கியதில் எந்த அர்த்தமும் இல்லை. வெறும் இரண்டே போட்டிகளில் ஆடிய அவருக்கு, ஒரேயொரு முறை மட்டுமே பந்துவீச வாய்ப்பளித்துவிட்டு, அடுத்த போட்டியில் உட்காரவைப்பது சரியல்ல. வெங்கடேஷ் ஐயரை உட்காரவைத்துவிட்டு மீண்டும் 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆடுகிறது. இந்த முடிவு எனக்கு வியப்பாக இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பே கிடைக்கவில்லை. 2வது போட்டியில் பேட்டிங்கில் 28 ரன்கள் அடித்த வெங்கடேஷ் ஐயர், 5 ஓவர்கள் பந்துவீசினார். ஆனால் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!