#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அவர் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்..! இந்திய முன்னாள் வீரரின் கணிப்பு

Published : Mar 31, 2021, 04:00 PM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அவர் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்..! இந்திய முன்னாள் வீரரின் கணிப்பு

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகும் பவுலர் யார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகும் பவுலர் யார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கடந்த சீசன் இந்தியாவில் நடக்காத நிலையில், இந்த சீசன் இந்தியாவில் நடப்பதால், ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சீசனில் எந்த பவுலர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரஷீத் கான் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார். அவருக்கு இது மிகச்சிறந்த சீசனாக அமையும். ஃபாஸ்ட் பவுலர்களை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா அசத்துவார்கள். 

நான் ஏன் ரஷீத் கான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்புகிறேன் என்றால், முதல் 5 போட்டிகளை அவர் சென்னையில் ஆடவுள்ளார். அதன்பின்னர் அடுத்த 4 போட்டிகளை டெல்லியில் ஆடுகிறார். எனவே லீக் சுற்றில் மொத்தம் 14 போட்டிகளில் 9 போட்டிகள் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் ரஷீத் கான் ஆடவுள்ளார். எனவே கண்டிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்துவார் ரஷீத் கான் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?
ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!