#IPL2021 ஆர்சிபி அணியின் 2 பலவீனங்களை சுட்டிக்காட்டிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published May 16, 2021, 9:37 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் ஆர்சிபி அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றாலும், அந்த அணியின் பலவீனங்கள் என்னென்ன என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டுக்காட்டியுள்ளார்.
 

ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடனேயே சீசனை முடிக்கும் ஆர்சிபி அணி, இந்த சீசனில் அபாரமாக ஆடியது. இந்த சீசனில் ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.

ஆர்சிபி அணிக்கு மேக்ஸ்வெல்லின் இணைவு வலுசேர்த்தது. கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என்ற 3 பெரிய வீரர்களுடன் தேவ்தத் படிக்கல் பேட்டிங்கில் வலுசேர்க்க, ஹர்ஷல் படேல் பவுலிங்கில் அசத்த, நல்ல அணி காம்பினேஷனுடன் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவந்தது ஆர்சிபி அணி.

ஆர்சிபி அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றாலும், அந்த அணியில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. ஆர்சிபி அணியின் பலவீனங்கள் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஆர்சிபி அணி வாஷிங்டன் சுந்தரை ஒரு பவுலராக சரியாக பயன்படுத்தவில்லை. அவரை அதிகமாக பந்துவீச வைக்க வேண்டும். சாஹலின் மோசமான ஃபார்ம் ஆர்சிபிக்கு பெரிய அடி. அவர் இந்த சீசனில் வெறும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சாஹல் விக்கெட் வீழ்த்தவில்லை என்பதால் அவருக்கு குறைவான ஓவர்கள் கொடுக்கப்பட்டால், அது ஆர்சிபிக்கு ஒர்க் அவுட் ஆகாது.

ஆர்சிபி அணியின் பேட்டிங் பலவீனமானது அல்ல. ஆனால் பேட்டிங்கில் டெப்த் இல்லை. கோலியும் தேவ்தத்தும் தொடங்குகிறார்கள். ரஜாத் பட்டிதர்/ஷபாஸ்/வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரில் ஒருவர் 3ம் வரிசையில் இறங்குகிறார். அதற்கடுத்து மேக்ஸ்வெல், 5ம் வரிசையில் டிவில்லியர்ஸ். ஆறாம் வரிசையில் யார்? ஆர்சிபி அணிக்கு 6ம் வரிசையில் பேட்டிங் ஆட பேட்ஸ்மேனே இல்லை. டேனியல் சாம்ஸ், டேனியல் கிறிஸ்டியன் இருக்கின்றனர் அல்லது சுந்தரை மேல்வரிசையில் இறக்காமல் ஆறாம் வரிசையில் இறக்க வேண்டும். பேட்டிங் டெப்த் அந்த அணியின் பிரச்னையாக உள்ளது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!