India vs Sri Lanka: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! முன்னாள் வீரரின் தரமான தேர்வு

By karthikeyan VFirst Published Mar 3, 2022, 3:13 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை(4ம் தேதி) மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி பெங்களூருவிலும் தொடங்கி நடக்கின்றன.

மொஹாலியில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி, விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. கேப்டன் ரோஹித்துடன், மயன்க் அகர்வாலை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். இவர்கள் இருவரும் தான் கண்டிப்பாக தொடக்க வீரர்களாக இறங்குவார்.

புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. எனவே இந்திய அணி ஹனுமா விஹாரியை 3ம் வரிசையிலும், ஷ்ரேயாஸ் ஐயரை 5ம் வரிசையிலும் இறக்கும் என தெரிகிறது. ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை 3ம் வரிசையிலும், ஹனுமா விஹாரியை 5ம் வரிசையிலும் இறக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

விக்கெட் கீப்பர் ரிஷப்  பண்ட். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். அஷ்வின் ஆடாத பட்சத்தில் ஆஃப் ஸ்பின்னராக ஜெயந்த் யாதவை இறக்கலாம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின்/ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.
 

click me!