#IPL2021 சிஎஸ்கேவின் ஆடும் லெவன்.. முன்னாள் வீரரின் தேர்வு

Published : Apr 01, 2021, 10:14 PM IST
#IPL2021 சிஎஸ்கேவின் ஆடும் லெவன்.. முன்னாள் வீரரின் தேர்வு

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணியின் முதல் போட்டிக்கான ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. முதல் அணியாக சென்னையில் பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே அணி, முதல் போட்டியை மும்பையில் ஆடவுள்ளதால் கடந்த 26ம் தேதி மும்பை சென்றது.

சிஎஸ்கே அணி வரும் 10ம் தேதி முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில், முதல் போட்டிக்கான சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

கடந்த சீசனில் அபாரமாக ஆடிய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டே இந்த சீசனிலும் டுப்ளெசிஸுடன் தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ராயுடுவை 3ம் வரிசையிலும் ரெய்னாவை நான்காம் வரிசையிலும் ஆடலாம் என்று தெரிவித்துள்ளார்.

கேப்டன் தோனி 5ம் வரிசையிலும் அவருக்கு அடுத்து ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் இறங்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த சீசனுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்த ராபின் உத்தப்பா, புஜாரா, மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோருக்கு ஆடும் லெவனில் ஆகாஷ் சோப்ரா இடம் கொடுக்கவில்லை.

ராபின் உத்தப்பாவுக்கு டாப் ஆர்டரிலும் இடமில்லை, மிடில் ஆர்டரிலும் இடமில்லை. தோனிக்கு அடுத்து ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆடுவதால் மொயின் அலிக்கும் அணியில் இடமில்லை. 

ஸ்பின்னராக கரன் ஷர்மாவை தேர்வு செய்துள்ளார் சோப்ரா. ஜடேஜாவும் இருப்பதால், அவருடன் கரன் ஷர்மாவை 2வது ஸ்பின்னராக சேர்த்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சிஎஸ்கே ஆடும் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!