ஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் வெளிநாட்டு ஆடும் லெவன் காம்பினேஷன்

By karthikeyan VFirst Published May 9, 2021, 3:51 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் சிறந்த வெளிநாட்டு ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் 14வது சீசனில் சிறப்பாக ஆடிய  வெளிநாட்டு வீரர்களின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக ஆடி தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 320 ரன்களை குவித்த டுப்ளெசிஸ் மற்றும் ராஜஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

ரெய்னா இருக்கும்போதே இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் 3ம் வரிசையில் இறங்கி அபாரமாக ஆடி அசத்திய மொயின் அலியை 3ம் வரிசை வீரராகவும், பல சீசன்களுக்கு பிறகு ஐபிஎல்லில் அசத்திய ஆர்சிபி அணியில் ஆடிய மேக்ஸ்வெல்லை 4ம் வரிசையிலும் தேர்வு செய்தார் ஆகாஷ் சோப்ரா.

டிவில்லியர்ஸ், பொல்லார்டு, ஆண்ட்ரே ரசல் ஆகிய ஐபிஎல்லின் பவர் ஹிட்டர்களை சிறந்த வெளிநாட்டு ஆடும் லெவனில் எடுத்த ஆகாஷ் சோப்ரா, ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் மோரிஸ், சாம் கரன் ஆகிய இருவரையும், ஸ்பின்னராக ரஷீத் கானையும், ஃபாஸ்ட் பவுலராக டிரெண்ட் போல்ட்டையும் தேர்வு செய்தார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்த சீசனின் சிறந்த வெளிநாட்டு ஆடும் லெவன்:

டுப்ளெசிஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், பொல்லார்டு, ஆண்ட்ரே ரசல், கிறிஸ் மோரிஸ், சாம் கரன், ரஷீத் கான், டிரெண்ட் போல்ட்.
 

click me!