கோலியை திட்டுனீங்க.. இப்ப ரோஹித் என்னத்த செஞ்சுட்டாரு..? தவறான அணி தேர்வே தோல்விக்கு காரணம் - ஆகாஷ் சோப்ரா

By karthikeyan VFirst Published Sep 9, 2022, 8:08 PM IST
Highlights

ஆசிய கோப்பை தோல்விக்கு பின் விராட் கோலியின் கேப்டன்சிக்கு ஆதரவாக  குரல் கொடுத்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
 

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோற்றதன் விளைவாக இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

கடந்த டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறாததையடுத்து கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்தன. அந்த டி20 உலக கோப்பையுடன் வெள்ளைப்பந்து அணிகளுக்கான கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி.

இதையும் படிங்க  - களத்தில் அடித்துக்கொண்ட ஆசிஃப் அலி - ஃபரீத் அகமது..! ஆப்பு அடித்த ஐசிசி

ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக அறியப்பட்டதுடன், அவரது கேப்டன்சியில் இந்திய அணி அனைத்து தொடர்களையும் வென்றுவந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் தோற்று வெளியேறியது. ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், முதலில் பேட்டிங் ஆடி இலக்கை செட் செய்த சூப்பர் 4 சுற்றின் 2 போட்டிகளிலும் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோற்றபோது கேப்டன் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்தன. கேப்டனை மாற்றவேண்டும் என்ற கருத்துகள் எல்லாம் எழுந்தன. இப்போது ரோஹித் சர்மாவின் கேப்டன்சியிலும் தோற்றிருக்கிறோம். எனவே பிரச்னை கேப்டன் அல்ல; அணி தேர்வில் தான் என்பது தெரிகிறது. 

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

சாஹலை ஓரங்கட்டினார்கள். இஷான் கிஷனை ஓபனிங்கில் இறக்கிவிட்டார்கள். சூர்யகுமார், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோரையும் ஓபனிங்கில் இறக்கிவிட்டார்கள். ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்கை திடீரென உட்காரவைத்தார்கள். இந்திய அணி கண்டிப்பாக தீபக் சாஹரை ஆடவைத்திருக்கவேண்டும். அக்ஸர் படேல் - ரவி பிஷ்னோய் இருவரில் ஒருவரை ஆட வைத்திருக்க வேண்டும். தீபக் ஹூடாவிற்கு பவுலிங் கொடுக்கும் ஐடியா இல்லை என்றால் தினேஷ் கார்த்திக்கை ஆடவைத்திருக்க வேண்டும். இந்திய அணி நிறைய மாற்றங்களை செய்ததுதான் தோல்விக்கு காரணம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். 
 

click me!