#IPL2021 சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் செம சவாலானது..! இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Mar 31, 2021, 6:40 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசன் சிஎஸ்கேவிற்கு கடும் சவாலானதாக இருக்கும் என்று காரணத்துடன் கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் மீண்டும் கெத்து காட்டும் முனைப்பில், முதல் அணியாக சென்னையில் பயிற்சியை தொடங்கியது.

கடந்த 26ம் தேதி சென்னையிலிருந்து மும்பை சென்ற சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சீசனில் ஆடாத சுரேஷ் ரெய்னா, இந்த சீசனில் சிஎஸ்கே ஆடினாலும் கூட, இந்த சீசன் சிஎஸ்கேவிற்கு கடும் சவாலானதாகவே இருக்கும் என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி ஆகிய சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் கடந்த சில மாதங்களாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடவில்லை. ஜடேஜாவும் காயம் காரணமாக இங்கிலாந்து தொடர் முழுவதுமாக ஆடவில்லை. சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் அனைவருக்குமே மேட்ச் பிராக்டீஸ் இல்லாததால் இந்த சீசன் கண்டிப்பாக சவாலானதாகவே இருக்கும்.

ஜடேஜாவை சிஎஸ்கே அணி பேட்டிங்கில் சற்று மேல்வரிசையில் ஆடவைக்க வேண்டும். ரெய்னா நன்றாக ஆடினால், சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும். இல்லையெனில் சிஎஸ்கேவிற்கு சவாலானதாகவே இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!