ஐபிஎல் 2020: சிஎஸ்கேவையே அச்சுறுத்தும் அசுர பலத்துடன் டெல்லி கேபிடள்ஸ்.. அல்லு தெறிக்கும் எதிரணிகள்

By karthikeyan VFirst Published Sep 14, 2020, 7:33 PM IST
Highlights

சிஎஸ்கேவிற்கு நிகரான ஸ்பின் பவுலிங் அட்டாக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி பெற்றிருப்பதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 13வது சீசன் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. வழக்கம்போலவே ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

இவற்றில் இளமையும் அனுபவமும் கலந்த டெல்லி கேபிடள்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு, ரிக்கி பாண்டிங் என்ற மிகப்பெரும் ஜாம்பவான் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறப்பாக வழிநடத்திவருகிறார். டெல்லி கேபிடள்ஸ் அணி, 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சீசனில் தான் பிளே ஆஃபிற்கு சென்றது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி என துடிப்பான இளம் வீரர்களும், ரஹானே, தவான், அஷ்வின் என அனுபவம் வாய்ந்த வீரர்களும் என துடிப்பான இளமையும் அனுபவமும் கலந்த கலவையாக அந்த அணி உள்ளது. 

இந்த சீசனிலாவது டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த முறை டெல்லி கேபிடள்ஸ் அணி தான் டைட்டிலை வெல்லும் என்று முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை தனது யூடியூப் சேனலில் அலசியுள்ள ஆகாஷ் சோப்ரா, அந்த அணியின் பேட்டிங்கும் ஸ்பின் பவுலிங் அட்டாக்கும் மிகச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா, டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த முறை பலவகைகளில் பலமான அணியாக உள்ளது. அந்த அணியின் பலத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.டெல்லி கேபிடள்ஸ் அணி கடந்த சீசனில் நன்றாக ஆடியது. இந்த சீசனிலும் வலுவாக அணியாக உள்ளது.

அந்த அணியின் பெரிய பலமே அதிகமான இந்திய பேட்ஸ்மேன்களை பெற்றிருப்பதுதான். பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என மிகச்சிறந்த இந்திய பேட்ஸ்மேன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த அணியில் முன்பெல்லாம் தரமான ஃபினிஷர் ஒருவர் இல்லாமல் இருந்தார். ஆனால் இப்போது, ஃபினிஷிங் ரோலை செய்யக்கூடிய ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் போன்ற வீரர்கள் உள்ளனர். 

இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியின் மற்றொரு பலம் அந்த அணியின் ஸ்பின் பவுலிங் யூனிட். சிஎஸ்கேவிற்கு நிகரான தரமான ஸ்பின் பவுலிங் யூனிட்டை டெல்லி கேபிடள்ஸ் பெற்றுள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா, அக்ஸர் படேல் மற்றும் சந்தீப் லாமிசன் ஆகியோர் உள்ளனர். அமீரக ஆடுகளங்கள் வறண்டு, தொடரின் பிற்பாதியில் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறூம். அதனால் டெல்லி கேபிடள்ஸின் தரமான ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் கண்டிப்பாக அசத்தும் என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி வீரர்கள்:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, சந்தீப் லாமிஷன், காகிசோ ரபாடா, கீமோ பால், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், ரஹானே, அஷ்வின், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.

click me!