ஓரங்கட்டப்பட்ட 2 பேருல ஒருத்தர் திரும்ப வந்துடுவார்.. அவருதான் டவுட்டு

By karthikeyan VFirst Published Sep 17, 2019, 4:05 PM IST
Highlights

ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டியது குறித்து முன்னாள் தொடக்க வீரர் தனது பேட்டிங்கை போலவே கருத்தையும் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் பிரைம் ஸ்பின்னர்களாக கடந்த 2 ஆண்டுகளாக இருந்துவந்த குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி அண்மைக்காலமாக டி20 அணியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தயாரிப்பு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலிருந்தே தொடங்கிவிட்டது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகிய இருவருமே இல்லை. வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம்பெற்றிருந்தனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரிலும் வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர். மற்ற அணிகள் 9-10ம் வரிசை வரை பேட்டிங் ஆடும்போது, நமது பேட்டிங் டெப்த்தையும் அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டதாகவும், டீம் காம்பினேஷனை கருத்தில் கொண்டே குல்தீப் - சாஹலை நீக்கியதாகவும் கோலி தெரிவித்தார். 

குல்தீப் - சாஹல் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, பேட்டிங் டெப்த்தை அதிகரிப்பது நல்ல முடிவுதான். இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் டெப்த்தை அதிகரித்ததன் மூலம் தான் 400 ரன்களை அசால்ட்டாக அடித்தது. அதே ஆக்ரோஷமான பேட்டிங் ஆர்டரை டி20 அணியில் உருவாக்கும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. அதில் தவறொன்றும் இல்லை. அதற்கான பலனை இந்திய அணி அறுவடை செய்ய தொடங்கிவிட்டது. குல்தீப்-சாஹல் இருவரில் சாஹல் மீண்டும் டி20 அணிக்கு வந்துவிடுவார் என தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, குல்தீப்பை பற்றி பேசவில்லை. 
 

click me!