இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஓவல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரசிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா ஸ்கோரை எடுத்து ஆஸி., முன்னிலை: ஸ்மித், ஹெட் விக்கெட்டை தட்டி தூக்கிய ஜடேஜா!
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். சிறந்த ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது.
வார்னர் அவுட் ஆனது கூட தெரியாமல் தூங்கிய மார்னஷ் லபுஷேன்!
பின்னர் ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸ் ஆடியது. இதில், தொடக்க வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக 3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியின் போது ரசிகை ஒருவர் சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். என்னை திருமணம் செய்து கொள் என்று பேனர் ஒன்றை காண்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவுட்டுன்னு நடையை கட்டிய ஆஸி வீரர்கள், சிராஜ் கேட்ட ரெவியூவால் திரும்ப வந்து பந்து வீசிய க்ரீன்!
Proposal for Shubman Gill at the Oval. pic.twitter.com/76hpNoPlbi
— Mufaddal Vohra (@mufaddal_vohra)