கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்த இன்று ஸ்பெஷலான தினம்.. அரிதினும் அரிதான முடிவை பெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்

By karthikeyan VFirst Published Nov 26, 2019, 4:03 PM IST
Highlights

கிரிக்கெட் வரலாற்றில் நவம்பர் 26 என்பது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிதினும் அரிதான முடிவை பெற்ற முக்கியமான தினம். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி 2011ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியது. அதில் இரண்டு தொடர்களையுமே இந்திய அணி தான் வென்றது. 

அந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 590 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் அடித்தது. 

108 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை, இந்திய அணி 134 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. இதையடுத்து வெற்றிக்கு 243 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இந்திய அணி. இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன. ஆனாலும் போட்டியை டிரா செய்ய நினைக்காமல் இந்திய அணி, வெறும் 64 ஓவரில் அந்த இலக்கை விரட்ட நினைத்தது. வெற்றிக்கான இலக்கை விரட்டிய முயற்சியில், இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. 

போட்டியின் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் 2 ரன் ஓடும் முயற்சியில் அஷ்வின் ரன் அவுட்டாகிவிட்டார். இதையடுத்து ஸ்கோர் லெவல் ஆனது. இந்திய அணி ஆல் அவுட்டும் ஆகாமல், அதேநேரத்தில் இலக்கையும் அடையாததால் போட்டி டிராவில் முடிந்தது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், ஸ்கோர் லெவலாகி போட்டி டிராவில் முடிந்தது. இதற்கு முன்னதாக கிரிக்கெட்டில் இதேபோன்ற முடிவை ஒரேயொரு போட்டிதான் பெற்றிருந்தது. அதன்பின்னர் இந்த போட்டிதான் இந்த மாதிரி டிரா ஆனது. அதன்பின்னர் எந்த போட்டியும் அந்த மாதிரி முடிவை பெறவில்லை. 

click me!