தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அபாரமாக ஆடிய 7 வயது சிறுமி..! வைரல் வீடியோ

Published : Aug 14, 2020, 08:09 PM IST
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அபாரமாக ஆடிய 7 வயது சிறுமி..! வைரல் வீடியோ

சுருக்கம்

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை 7 வயது சிறுமி வெகுசிறப்பாக ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி பாராட்டை குவித்துவருகிறது.  

டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆடாமல் தடுப்பதற்காக ஃபாஸ்ட் பவுலர்கள் யார்க்கர்களை வீசுவார்கள். ஆனால் துல்லியமான யார்க்கர்களை கூட தோனி ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸருக்கு அனுப்புவார். கைகளின் மணிக்கட்டுகளை சுழற்றி முழு பவருடன் தோனி அடிக்கும் ஷாட் மிஸ்ஸே ஆகாது. தோனியின் இந்த ஷாட் ஹெலிகாப்டர் ஷாட் என்று அழைக்கப்படுகிறது. 

கடந்த காலங்களை போல அல்லாமல், மாடர்ன் டே கிரிக்கெட்டில் பல வித்தியாசமான ஷாட்டுகள் ஆடப்படுகின்றன. அவற்றில் தோனி கண்டுபிடித்த ஹெலிகாப்டர் ஷாட்டும் ஒன்று. தோனி அறிமுகப்படுத்திய அந்த ஷாட்டை அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், ரஷீத் கான் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆடிவருகின்றனர். 

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது சிறுவர், சிறுமிகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தோனியின் ஹெலிகாப்டர் ஷாட். 7 வயது சிறுமி ஒருவர் ஹெலிகாப்டர் ஷாட்டை அருமையாக ஆடியிருக்கிறார். அந்த ஷாட்டை பார்த்து தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சுட்டிக்காட்டி சிறுமியை பாராட்டியிருந்தார் சஞ்சய் மஞ்சரேக்கர். 

பாரி ஷர்மா என்ற, இந்த 7 வயது சிறுமியின் பேட்டிங்கை பார்த்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்களான நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் அந்த சிறுமியை வெகுவாக பாராட்டியிருந்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!