#ICCWTC ஃபைனல்: 5ம் நாள் ஆட்டமும் மழையால் தாமதம்..! இனிமேல் முடிவு கிடைப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு கூட இல்ல

Published : Jun 22, 2021, 03:39 PM IST
#ICCWTC ஃபைனல்: 5ம் நாள் ஆட்டமும் மழையால் தாமதம்..! இனிமேல் முடிவு கிடைப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு கூட இல்ல

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 5ம் நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவது தாமதமாகியுள்ளது.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி, மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2ம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 3ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது.

வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாளான நேற்றைய ஆட்டம் முழுவதுமே மழையால் ரத்தானது.

இந்நிலையில், 5ம் நாளான இன்றைய ஆட்டமும் தொடங்க தாமதமாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக ஆட்டம் இன்றும் தாமதமாகியுள்ளது. ஏற்கனவே அரை மணி நேரத்திற்கும் மேல் தாமதமாகிவிட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் பாதிக்கப்பட்டால், இந்த போட்டியில் இனிமேல் முடிவு கிடைப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு கூட இருக்காது. நாளை ஒருநாள் ரிசர்வ் டே ஆட்டம் இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக இந்த போட்டியில் முடிவு கிடைப்பது சாத்தியமற்றது.
 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?