IPL 2022: மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் 590 வீரர்கள்; 30 தமிழக வீரர்கள்! விளையாட்டுத்துறை அமைச்சரும் இருக்கார்

Published : Feb 01, 2022, 08:35 PM IST
IPL 2022: மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் 590 வீரர்கள்; 30 தமிழக வீரர்கள்! விளையாட்டுத்துறை அமைச்சரும் இருக்கார்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் 590 வீரர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த சீசனில் 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை  எடுத்தது.

வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ள இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இந்த ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்தனர்.

10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப்பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, 590 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்கிறார்கள். இந்த 590 வீரர்களின் 228 பேர் சர்வதேச வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிராத 355 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளதில் 370 பேர் இந்திய வீரர்கள்; 220 வெளிநாட்டு வீரர்கள்.

48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடி. 20 வீரர்களின் அடிப்படை விலை ரூ. 1.50 கோடி. 34 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1 கோடி.  

36  வயதான கிரிக்கெட் வீரரும் மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான மனோஜ் திவாரி ரூ.50 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மனோஜ் திவாரி ஐபிஎல்லில் கேகேஆர் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளில் ஆடியுள்ளார். இந்திய அணிக்காகவும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு ஜெயித்த மனோஜ் திவாரி, விளையாட்டுத்துறை அமைச்சராக்கப்பட்டார். 

இந்த ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக், அஷ்வின், ஷாருக்கான் உள்ளிட்ட தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏலப்பட்டியலில் இடம்பெற்ற தமிழக வீரர்களின் பெயர்கள், அடிப்படை விலையுடன்...

1. ரவிச்சந்திரன் அஷ்வின் - ரூ. 2 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் - ரூ. 1.50 கோடி
3. தினேஷ் கார்த்திக் - ரூ. 2 கோடி
4. நடராஜன் - ரூ. 1 கோடி
5. ஷாருக்கான் - ரூ. 40 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
8. என். ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்
9. முருகன் அஷ்வின் - ரூ. 20 லட்சம்
10. மணிமாறன் சித்தார்த் - ரூ. 20 லட்சம்
11. விஜய் சங்கர் - ரூ. 50 லட்சம்
12. ஜி. பெரியசாமி - ரூ. 20 லட்சம் 
13. சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
14. சந்தீப் வாரியர் - ரூ. 20 லட்சம் 
15. சாய் சுதர்சன் - ரூ. 20 லட்சம்
16. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம் 
17. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம் 
18. அருண் கார்த்திக் - ரூ. 40 லட்சம் 
19. ஆர். சிலம்பரசன் - ரூ. 20 லட்சம் 
20. அலெக்ஸாண்டர் - ரூ. 20 லட்சம்
21. எஸ்.கிஷன் குமார் - ரூ. 20 லட்சம்
22. முரளி விஜய் - ரூ. 50 லட்சம்
23. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம் 
24. சோனு யாதவ் - ரூ. 20 லட்சம்
25. அதிசயராஜ் - ரூ. 20 லட்சம் 
26. வி.கெளதம் - ரூ. 20 லட்சம் 
27. எம்.முஹமது - ரூ. 20 லட்சம் 
28. பிரதோஷ் பால் - ரூ. 20 லட்சம்
29. ஜெ.கெளசிக் - ரூ. 20 லட்சம்
30. நிதிஷ் ராஜகோபால் - ரூ. 20 லட்சம் 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!